ஆம்பூர் மாயமான பெண் வழக்கில் திடீர் திருப்பம்.! கள்ளக்காதல் ஜோடியின் பகீர் வாக்குமூலம்..!! அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்துள்ள அறங்காதுருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்தை சார்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கு போச்சம்பள்ளி பகுதியை சார்ந்த நபருடன்., கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில்., கணவன் - மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து தந்து தாயாரின் இல்லத்திற்கு வந்து தாயாருடன் வசித்து வந்துள்ளார். 

பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக ரேவதிக்கு கே.ஜி.எப் பகுதியை சார்ந்த மகேஷ் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. மகேஷ் பெங்களூரில் பணியாற்றி வரும் நிலையில்., ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது தாயரின் இல்லத்திற்கு வந்துள்ளார். இந்த நேரத்தில்., கடந்த 20 ஆம் தேதியன்று தனது கணவருடன் அலைபேசியில் பேச வெளியில் சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. 

ஆம்பூர், ஆம்பூர் ரயில் நிலையம், aambur railway station,

இதனையடுத்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்., இதே ஊரின் வனப்பகுதியருகே ரேவதி கழுத்தில் காயத்துடன் பிணமாக கிடந்துள்ளது. இது தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர். 

மேலும்., அவர் மாயமான நேரத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் அலைபேசி ஆகியவை மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரேவதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகைக்காக கொலை செய்யப்டட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில்., இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ரேவதியுடைய உறவினர் செல்வராஜ் (வயது 44) மற்றும் இவரது பக்கத்து வீட்டினை சார்ந்த ராஜா என்பவரின் மனைவி சித்ரா (வயது 35) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., செல்வராஜ் ஆம்பூரில் துணிதைப்பகம் வைத்து நடத்தி வரும் நிலையில்., சித்ரா திருப்பூரில் துணி தைப்பவராக பணியாற்றி வருகிறார். 

illegal affair, couple enjoy, affair, husband wife enjoy, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், உல்லாசம், கணவன் மனைவி உல்லாசம்,

இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே., இவர்கள் இருவரும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த தருணத்தில்., கடந்த சில நாட்களுக்கு ஊருக்கு வந்திருந்த சித்ராவின் நகைகளை கண்டு கள்ளக்காதல் ஜோடி ஆசைப்பட்டுள்ளது. இவர்களின் ஆசைப்படி ரேவதியின் நகைகளை கொள்ளையடித்து., கடனை அடைத்துவிட்டு உல்லாசமாக ஊர் சுற்றலாம் என்று எண்ணியுள்ளனர். 

இதனையடுத்து ரேவதிக்கு செல்வராஜ் உறவினர் என்ற முறையில்., ரேவதியிடம் பக்குவமாக பேசி தனது இல்லத்திற்கு அழைத்து கருவிருந்து வைத்த நிலையில், ஊரில் உள்ள தனது கணவரிடம் பேச மலைப்பகுதிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இவர்களின் ஊரில் தொலைத்தொடர்பு பிரச்சனை இருப்பதால் இதனை சாதகமாக உபயோகம் செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி கொலை செய்து 10 சவரன் நகையை கொள்ளையடித்ததும்., கொள்ளையடிக்கப்பட்ட நகையை சித்ராவின் வீட்டில் புதைத்துவைத்து கொண்டு இருந்ததும்., இவர்கள் இருவரும் ஏதும் தெரியாதது போல இருந்ததும் விசாரணையில் அதிர்ச்சியாக வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் தற்போது விசாரணைக்கு பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ambur girl murder due to bangles attempt by illegal affair couple


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal