"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்… "ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்" - எடப்பாடிக்கு சசிகலா சொல்லும் செய்தி! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, அதிமுக தொண்டர்களுக்காக எழுதியுள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராய நகரில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்துக்குப் பிறகு வெளிவந்த இந்தக் கடிதத்தில், சசிகலா, “தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக ஆட்சி மீண்டும் அமைய, அனைவரும் கரம் கோர்த்து ஒன்றுபட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தொண்டர்களுக்காகவும் ஏழை எளிய மக்களுக்காகவும் எப்போதுமே செயல்பட்ட இயக்கம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் தலைமையால் தான் கழகம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லாட்சியை வழங்கியது.

“நான் துரோகிகளின் சதிகளை முறியடித்து, 35 ஆண்டுகளாக கழகத்தை காத்து வளர்த்தேன். அதில் எனது பங்களிப்பும் உண்டு” என சசிகலா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி சொன்ன வழியில் செல்ல வேண்டிய நிலையில், இன்று கட்சியில் பிளவுகள் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக மீது சசிகலாவின் குறிப்பு:

“ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கேற்ப, இன்று திமுக குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட்டால்தான் திமுகவைக் களைய முடியும். எங்கள் இயக்கம் 100 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்காகவே இயங்கும்” என்று சசிகலா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

2026 தேர்தல் குறித்த சசிகலாவின் உறுதி:

“ஒன்றுபட்ட அதிமுகத்துடன் அசுர பலத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மீண்டும் கழக ஆட்சி அமையும்” என சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் அடித்தட்டு தொண்டர்கள் வரை அனைவரும் சிந்தித்து, ஒன்றுபட்டு வெற்றிக்கான பாதையில் செல்ல வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If the city is divided there will be celebration in Koothadi Let unite and show our victory Sasikala message to Edappadi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->