பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்றால் 2021-ல் அதிமுக+ பாஜக கூட்டணி தோற்கும்னு அமித்ஷாகிட்ட எழுதி கொடுத்தேன்! டிடிவி தினகரன் ஷாக் தகவல் - Seithipunal
Seithipunal


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிரடியாகப் பேசியுள்ளார். “எடப்பாடி பழனிசாமியுடன் சேர வாய்ப்பே இல்லை” என்றும், “2021-ல் அவர் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அதிமுக தோற்றுப்போய்விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தேன்” என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்தும் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறியதாவது:“சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தலுக்கு பிறகே நடத்த வேண்டும். தற்போது வழங்கப்படும் ‘சார்’ படிவங்களில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் சாதாரண மக்களுக்கு அந்தப் படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது,” என்று தெரிவித்தார்.

அமமுக தலைவரான டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.அவர் கூறியதாவது:“எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர வாய்ப்பே இல்லை. துரோகத்தை வீழ்த்தாமல் யார் தடுத்தாலும் நான் ஓய மாட்டேன். பன்னீர் செல்வம் துரோகம் செய்தார் என எடப்பாடி கூறுகிறார்; ஆனால் யார் துரோகம் செய்தார்கள் என்பது உலகுக்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல — பொதுச் செயலாளர் பதவியை பிடித்து வைத்திருக்கவே எடப்பாடி முயல்கிறார்,” என்று கடுமையாகக் கூறினார்.

“விஜய்யின் வருகையால் 2026 தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். அடுத்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும்,” என டிடிவி தினகரன் கணித்தார்.
அவர் மேலும் விளக்கியதாவது, “தவெக உடன் கூட்டணி வைப்பதற்காக நான் இப்படி சொலவில்லை. ஒரு சாதாரண குடிமகனாக அரசியல் நிலையை மதிப்பிட்டு சொல்கிறேன். சரியான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டி இருக்கும்.”

“சில கட்சிகள் என்னை அணுகியுள்ளன. ஆனால் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. வெற்றி பெறக்கூடிய கட்சியுடன்தான் கூட்டணி வைப்பேன். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கூட்டணிக்கு உட்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவேன்,” என்று தெரிவித்தார்.

“எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜா அணி, ஜெ அணி என பிரிந்திருந்தபோது, எதிர்த்து நின்றவர்களையும் ஜெயலலிதா பின்னர் அரவணைத்துக் கொண்டார். ஓ. பன்னீர் செல்வம் ஜானகி அணியில் இருந்தவர்; அவரை ஜெயலலிதா முதல்வராக நியமித்தார். ஆர்.எம். வீரப்பன், பா. வளர்மதி போன்றோர் ஆரம்பத்தில் எதிராக இருந்தும் பின்னர் இணைந்தனர். ஆனால் அதற்காக நான் இணைய விரும்புகிறேன் என நினைக்க வேண்டாம்,” என்று கூறினார்.

“எடப்பாடி பழனிசாமியை எங்களால் முதல்வராக்கினோம். ஆனால் அவர் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார். எடப்பாடியைத் தவிர அந்தக் கட்சியில் யாரிடமும் எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை,” என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

இறுதியாக அவர் கூறினார்:“அடுத்த ஆண்டு ஜனவரியில் கூட்டணிக்கான அறிவிப்புகளை முறைப்படி வெளியிடுவேன். புதிய மாற்றங்கள் வரப்போகின்றன,” என்று தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் இந்த அதிரடி வெளிப்பாடு, தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை சீரமைத்து வரும் நிலையில், டிடிவியின் “எடப்பாடியுடன் சேர வாய்ப்பே இல்லை” என்ற உரை, அதிமுக வட்டாரத்திலும், தவெக கூட்டணியிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I wrote to Amit Shah that if Palaniswami is the CM candidate the AIADMK BJP alliance will lose in 2021 TTV Dhinakaran shocks news


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->