பைக் சீட்டின் கீழ் மறைத்து வைத்த ₹25.5 லட்சம்! - ஹவாலா சந்தேகத்தில் விசாரணை தீவிரம்...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் வேலந்தாவளம் சோதனைச் சாவடி பகுதியில், பைக்கில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.25.5 லட்சம் ரொக்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.கோவை மாவட்ட பேரூர் சரக டி.எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதில், “கேரளாவுக்கு பெருமளவு பணம் கடத்தப்படுகிறது” என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, மதுக்கரை எஸ்.ஐ. பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் வேலந்தாவளத்தில் சோதனையை தீவிரப்படுத்தினர்.அப்போது, பைக்கில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாங்கடா பகுதியைச் சேர்ந்த முனீர் (40) எனத் தெரியவந்தது.

பைக் சீட்டின் அடியில் சோதனை செய்தபோது, ₹25.5 லட்சம் ரொக்கம் கவனத்துக்குவந்தது.இதைத் தொடர்ந்த விசாரணையில், முனீர் தனது நண்பர் நிசார் (40) என்பவர், கேரள மாநிலம் பெருந்தல்மன்னாவைச் சேர்ந்தவர், அவரிடம் 200 கிராம் தங்கத்தை உக்கடத்தில் விற்று, அதன் பணத்தை ரொக்கமாக கொண்டு வரச் சொன்னார் என விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், போலீசார் சந்தேகத்தில் ஆழ்ந்துள்ளனர்.“முனீர் கூறும் விளக்கம் உண்மையா, அல்லது இது ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, பைக்குடன் ரூ.25.5 லட்சம் ரொக்கத்தையும், முனீரையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

25point5 lakh hidden under bike seat Investigation intensified suspicion hawala


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->