எனக்கு புதிய புகழ் தேவை இல்லை..இருக்குற புகழே போதும் - முதல்வர் ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே எனக்கு போதும்' என்று பேசினார்.

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் 64 ஆயிரம் பயனாளிகளுக்கு, ரூ.167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: 

இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளது என்றும், பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர் என்றும்,  பல்வேறு மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன என்றும், இந்தியாவுக்கே ஒரு நல்ல வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துகிறோம் என்றும் பேசினார்.

மேலும், யாரோ ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி. நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழகத்தில் தான் அதிகம். முதல்வராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட்டு வருகிறேன். 

மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. நெல் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது. என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே எனக்கு போதும். என்றும் அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I don't need new fame..existing fame is enough-chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->