பல ஆண்களுடன் தொடர்பு.. இளம்பெண்ணை போட்டு தள்ளிய கள்ளக்காதலன் சிக்கியது எப்படி?பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் இளம்பெண்ணை ஆத்திரத்தில்  கள்ளக்காதலன் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டான்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேசன்,இவர்  சரஸ்வதி என்ற பெண்ணை  காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.லாரி டிரைவரான கணேசன் அடிக்கடி வேலைக்கு செல்லும்போது சரஸ்வதி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.இது கணவருக்கு தெரியவர அவரை கண்டித்துள்ளார்.

இதனால் , கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி, கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி அந்த வீட்டில் சரஸ்வதி, அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கொளத்தூர் போலீசார்  நடத்திய விசாரணையில், சரஸ்வதியுடன் ஆண் ஒருவர் தங்கி இருந்தது தெரியவந்தது. தீவிர விசாரணையில் அவர், சரஸ்வதியின் கள்ளக்காதலன் என்பதும்,தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா நகரில் சலவை நிலையம் நடத்தி வரும் மத்திய பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த முகமது அன்சாரி என்பவரை  போலீசார் கைது செய்தனர்.

அப்போது முகமது அன்சாரி அளித்த வாக்குமூலத்தில், "கடந்த 7 மாதங்களுக்கு முன்பு எனது கடைக்கு சரஸ்வதியுடன்  பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி கள்ளக்காதலில் இருதோம் .

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதி, கணவருடன் கோபித்துக்கொண்டு கொளத்தூர் வந்தபோது இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். 

சரஸ்வதி அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததால்  அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று இருவரும் மது அருந்திவிட்டு  போதையில் மயங்கி கீழே படுத்தபோது .  வயிற்றிலும், தலையிலும் மிதித்து கொலை செய்தேன். பின்னர் அவள் அணிந்து இருந்த 3 பவுன் நகை மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டேன்" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did the deceptive lover, who pushed away a young woman after having contact with several men get caught? Shocking news


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->