கனமழையில் தத்தளிக்கும் மருத்துவமனை! குழந்தைகள் வார்டு வரை மழைநீர் புகுந்த பரபரப்பு...!
Hospital reels under heavy rain Rainwater enters childrens ward causing panic
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பீரங்கி போல் பொழிந்து, பல மாவட்டங்களைப் பரவலாகச் சூழ்ந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கடந்த இரண்டு நாட்களாக இடைவேளையில்லா கனமழையில் நனைந்து கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியான மழைப்பொழிவால் தாழ்வான குடியிருப்பு பகுதிகள் குளம் போல நீரில் மூழ்கி செய்யல்களில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு கொந்தளித்து ஓடுகிறது.

இந்த நிலை கடுமையாக இருந்து வரும் நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் நேற்று பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை மழைநீர் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும்,குறிப்பாக குழந்தைகள் வார்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கி மற்றும் பல முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் தண்ணீர் தேங்கி, சிகிச்சை பெறும் நோயாளிகள் மிகுந்த அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.
மேலும், மருத்துவமனை முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், நோயாளிகள் மட்டுமின்றி பொதுமக்கள் கூட உள்ளே செல்வதே கடினமான நிலை உருவாகியுள்ளது. மருத்துவமனை செயல்பாடு பாதிக்கப்படாமல் இருக்க, தற்போது ராட்சத பம்புகள் மூலம் குவிந்த நீரை வெளியேற்றும் பணிகள் அவசரகால நடவடிக்கையாக நடைபெற்று வருகின்றன
English Summary
Hospital reels under heavy rain Rainwater enters childrens ward causing panic