ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது!  - Seithipunal
Seithipunal


பண மோசடி வழக்கில் தொடர்புடைய ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடம் இருந்து 13,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்,
பொதுமக்களிடம் சுமார் 4,400 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனமானது, அதன் தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் சேர்ந்து பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட் தொகைக்கு, மாதம் 15 சதவீதம் வட்டி தொகை அளிப்பதாக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளனர்.

சுமார் 89,000 முதலீட்டாளர்களிடமிருந்து 4400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். பின்னர் முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர வட்டி மற்றும் அசல் தொகையை நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என்பது முதல் கட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களான 19 நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த செய்தது.

ஏற்கனவே இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் கைதான நிலையில், நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வி மற்றும் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தேடப்படும் முக்கிய நபர்களான அலெக்சாண்டர், மகாலட்சுமி ஆகிய வரை போலீசார் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hijau Scam Arrested chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->