கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கு - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சி செய்ததாக சிபிசிஐடி விசாரணை செய்யும் வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், வழக்கு குறித்து பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிட தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையின் போது, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டதா?, பேராசிரியைக்கு எதிராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்தது?, குற்ற வழக்கின் விசாரணை நிலை என்ன?, ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் நிர்மலாதேவி கடந்த 2018ம் ஆண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், சாட்சி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "குற்றப்பத்திரிகையின் நகலை தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கும், பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக எடுக்கபட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மதுரை காமராஜர் பல்கலைகழக தரப்பிற்கும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court investigation professor nirmaladevi case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->