​சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய கட்டாயம் இல்லை - அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் ஜெகதீஸ்வரன், அதிமுக சட்டப்பேரவை கொறடா வேலுமணி உள்ளிட்டோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது. பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டத்தின்படி கட்டாயம் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சபாநாயகருக்கு உத்தரவிட அரசியலமைப்பு சட்டம் தடைவிதிக்கவில்லை. இ-விதான் என்ற செயலி மூலம் நேரடியாக ஒளிபரப்பலாம். 

பல சட்டப்பேரவைகளிலும் இந்த செயலி மூலம் நேரடியாக நிகழ்வுகள் ஒளிபரப்புகின்றன.
மேலும், ஆளும்கட்சியினர் பேசும்போது நேரலை செய்யப்படுவதாகவும், எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் பேசும்போது நேரலை துண்டிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

மேலும், சட்டப்பேரவை ஒளிபரப்பின்போது இருட்டடிப்பு செய்வதை நிரூபிப்பதாக கூறி வேலுமணி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court investigation legislature live telecast case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->