நீட் விவகாரம் குறித்து எச் ராஜா பரபரப்பு ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை, சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ நுழைவுத்தேர்வு முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையில் மாணவர் சேர்க்கைக்கு உறுதி அளிக்கப்படும் என்றும், நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். 

ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் நீட் தேர்வு பாதிப்புகளுக்கு தீர்வுகள் காணப்படும்.  

சமீபத்தில், நீட் பாதிப்பு குறித்து பொதுமக்கள் வரும் 23ம் தேதிக்குள், neetimpact2021@gmail.com என்ற இமெயில் வழியாகவோ தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், இது குறித்து பாஜக எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நீட் குறித்த முதல்கட்ட ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அதன் தலைவர் நீதிபதி ஏ கே.ராஜன் அவர்கள் நீட்டால் தமிழகத்திற்கு பாதிப்பு என்று பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கருத்து கூறியுள்ளார். மேலும் அதிலுள்ள உறுப்பினர்கள் இருவருமே நீட் எதிர்ப்பாளர்கள். அப்படியாயின் மக்களுக்கு அழைப்பு கண்துடைப்பா என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja tweet for neet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->