பள்ளிக்கு அருகே தடை செய்யப்பட்ட பொருட்கள்.. அதிரடி கட்டிய அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் காட்பாடி, கொணவட்டம் பகுதிகளில் நேற்று வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில், ராேஜஷ் ஆகியோர் போலீசாருடன் இணைந்து குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை நடத்தினர்.

இதில் கழிஞ்சூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கடையில் மட்டுமே 7,008 புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து முள்ளிப்பாளையம் தொடங்கி கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை 9 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் பள்ளி அருகில் ஒரு பங்க் கடையில் 350 புகையிலை மற்றும் கூல்கிட் எனப்படும் புகையிைலை பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டன.

அந்த 2 கடைகளுக்கும் சீல் வைத்த அதிகாரிகள் 2 மாதங்களுக்கு கடைகள் திறக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதுடன், தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பள்ளி அருகில் உள்ள கடைகளில் சோதனை தொடரும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gutkha captured in Shop near school in Vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->