"ஓவர் டேக்" போட்டியால் நேர்ந்த விபரீதம்! ஓட்டுனர் தீவிர சிகிச்சை பிரிவில், திக்குமுக்காடிப் போன பயணிகள்!! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்தும் லாரியும் போட்டி போட்டு  வந்து  மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் உட்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து  திருச்செந்தூர் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் அதற்கு முன்னே சென்ற லாரியும்  ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் இசிஆர் பகுதியில் ஒன்றை ஒன்று முந்தி போட்டி போட்டு சென்று கொண்டிருந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதியதில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.  இந்த விபத்தில்  அரசு பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் சந்திரகுடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு  தலையில் பலத்த காயவை ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் தவிர பேருந்தின் ஓட்டுநர் மற்றும்  சில பயணிகளுக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன.

இந்த விபத்தின் காரணமாக பகுதியில்  சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கேணிக்கரை போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus towards thiruchendur met with an terrible accident driver admitted in icu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->