ஒரு வருடமாக ஆசிரியர்களே வராத அரசு பள்ளி! பாடம் நடத்திய கிராம மக்கள்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளிபுதூர் ஊராட்சி கல்வி வசதிகள் இல்லாமலிருந்ததால் கிராம மக்கள் பல ஆண்டுகளாக தவித்துவந்தனர். 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் மாணவ-மாணவிகள் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்க 1 கி.மீ தூரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வந்தனர்.

கிராம மக்கள் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் மாவட்ட நிர்வாகம் 2023-ம் ஆண்டு டிசம்பரில் ₹39 லட்சம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட தொடக்கப்பள்ளியை கட்டி திறந்து வைத்தது.

ஆனால் பள்ளி திறக்கப்பட்டு 1 வருடம் ஆனபோதிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இன்று காலை பள்ளி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பள்ளி முன்பு கோஷங்களை எழுப்பி, ஆசிரியர் நியமனத்தை கோரினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.பள்ளி வளாகத்தில் மாணவர்களை அமரவைத்து, கிராமத்து இளைஞர்களே தற்காலிக ஆசிரியர்களாக பாடம் நடத்தினர்.

தகவல் கிடைத்தபோதிலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராதது கிராம மக்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

கிராம மக்கள் தெரிவித்ததாவது,"முடியாத நிலையில், 1 வருடமாக மாணவர்கள் வெறுமனே பள்ளிக்கு சென்று வீடு திரும்புகின்றனர். கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்," என்று கூறினர்.

இந்த போராட்டம் மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்கத் தூண்டுமா என்பதை எதிர்பார்க்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government school without teachers for a year The villagers who conducted the lesson


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->