அரசு பேருந்து கட்டுப்பாடு இழந்தது...! நெல்லையில் ஆட்டோ மீது மோதல் - 4 பெண்கள் படுகாயம்...!
Government bus loses control Collides auto rickshaw Nellai 4 women seriously injured
நெல்லை மாவட்டம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய விபத்து ஒன்று நிகழ்ந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 பெண்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதற்கட்ட தகவலின்படி, அரசு பேருந்தின் பிரேக் செயலிழந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று சென்றதால் ஏற்பட்ட விபத்தில் 2 கார்களில் பயணித்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் இன்னும் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், தற்போது நெல்லையில் அரசு பேருந்து மீண்டும் விபத்தில் சிக்கியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் அதிகரித்துள்ளது.
English Summary
Government bus loses control Collides auto rickshaw Nellai 4 women seriously injured