தமிழகத்தில் பள்ளிகளை திறக்காதிங்க., வெளியான பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று, ஜி கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக அரசு விரைவு படுத்த வேண்டும். 

வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு பின்பாகவும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டங்களில் பள்ளி மாணவர்கள் வெளியே செல்வதால் பெரிய பாதிப்பு ஏற்படலாம்.

எனவே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்காமல், நவம்பர் மாதம் 8ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஜிகே வாசன் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவர் திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் குறித்து தெரிவிக்கையில், "திமுக அரசின் தேர்தல் கால அறிவிப்புகளில் முக்கியமானது குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் நெல்லுக்கான ஆதார விலை ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும்.

மது கடைகளுக்கு விடுமுறை அளிக்காத தமிழக அரசு, தமிழகத்தில் வழிபாட்டுத் தளங்களுக்கு மட்டும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதித்து இருப்பது முரணாக உள்ளது. அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan say about nov school open issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->