பிரபல நடிகரின் மகனைக் கடத்தி தாக்கிய கும்பல் - சென்னையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை மட்டுமல்லாமல் சினிமாவிலும் பிரபலமான பிர்லா போஸ் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் பிர்லா போஸ் வீட்டில் பார்க்கிங்கிற்காக பிரச்சினை நடந்துள்ளது. இதனால், அவரது மகனை பிரச்சினை செய்தவர்கள் கும்பலாகக் கடத்தி சென்று தாக்கியுள்ளனர். இதையறிந்த அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “நான் இப்போ சென்னையில குடியிருக்கற வீட்டுக்குக் கீழே ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த வீட்டுப் பையன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவனைப் பார்க்க நண்பர்கள் வந்தார்கள். அப்போது, ‘பார்க்கிங்’ படத்தைப் போல என் வீட்டிலும் ஒரு சம்பவம் நடந்தது. 

அதாவது என் காரை அந்தப் பையனுடைய நண்பர்கள் சேதப்படுத்தி விட்டனர். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்க, அந்தப் பசங்க வயது வித்தியாசம் இல்லாமல் என்னைத் தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். என் மகனும் பதிலுக்கு சத்தம் போட்டான். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாசம் ஆச்சு.

ஆனால், போன வாரம் டியூஷன் போயிட்டு வந்த என் மகனை பத்துப்பேர் கடத்திக் கூட்டிட்டு போய் அடிச்சு இருக்காங்க. இரத்தம் வெளியே வராதபடிக்கு எல்லாமே உள்காயம். இதை கீழ்வீட்டுப் பையன் தான் செஞ்சுருக்கான். இது தெரிஞ்சதுமே நான் பதறிப்போயிட்டேன். 

காவல்துறையில் புகார் கொடுத்திருக்கேன். அவங்களும் விசாரிட்டு இருக்காங்க. படிக்கற வயசுல மாணவர்கள் மத்தியில் இருக்கற இந்த வன்முறை எனக்கு அதிர்ச்சியா இருக்கு” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gang attack actor birla bose son


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->