இன்று முதல் 16-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா?
From today until the 16th there is a chance of heavy rain. Do you know which districts?
இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல், அந்தமான் நிக்கோபார் தீவு, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் மே மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம் .அதன்படி இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழைஇன்று அந்தமான் கடல் பகுதியில்தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நாளை, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..
வருகிற 15-ந்தேதி,16-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
From today until the 16th there is a chance of heavy rain. Do you know which districts?