இலவசப் பேருந்து சேவை நிறுத்தம்...? - பரவிய வதந்திக்கு அரசு கொடுத்த அதிரடி விளக்கம்...! - Seithipunal
Seithipunal


கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம், அரசு மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதையடுத்து, மகளிருக்கான இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வேகமாக பரவின.

இந்த பரபரப்பான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் வெளியிட்டுள்ளது.அதில், “தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயண சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.

இதுதொடர்பாக தமிழக அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று வழங்கப்பட்ட மகளிருக்கான கட்டணமில்லா பயணச்சீட்டின் நகலும் ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free bus service stopped government drastic explanation rumor that spread


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->