ஆள்மாறாட்டம் செய்து 5.10 கோடி மோசடி..கேரள வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


தனியார் நிறுவனத்தில் உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து 5.10 கோடி ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் சென்ற வங்கி கணக்கின் உரிமையாளரை கேரளாவில் வைத்து கைது செய்த இணையவழி போலீசார்.

 தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் வாட்ஸ் அப்பில் அந்த நிறுவனத்தின் அக்கவுண்டன்ட் தொடர்பு கொண்டு அவர் அரசு அதிகாரிகள் சந்திப்பில் உள்ளதாகவும் மற்றும் அவர் தொடங்க உள்ள புதிய திட்டத்திற்காக அவர் கூறும் வங்கி கணக்கில் பணத்தையும் அனுப்புமாறு கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பி அந்த அக்கவுண்டன்ட் ரூபாய் ஐந்து கோடியே 10 லட்சம் அனுப்பி விட்டார். மேற்படி வழக்கின் விசாரணையில், சைபர் குற்றவாளி மோசடி மூலம் பெறப்பட்ட ரூ.5,10,00,000/- தொகையில் சுமார் ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள ஒரு வங்கிக்கு மாற்றப்பட்டதுள்ளது என்று கண்டறியப்பட்டது. மேலும், அந்தக் கணக்கு மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத் மாவட்டம், ஜலாங்கியைச் சேர்ந்த மொஃபிகுல் ஆலம் முலா என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்து கடந்த மாதம் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு வங்கி கணக்கில்  ரூபாய், 1,80,00,000 சென்ற நிலையில் அந்த வங்கி கணக்கு கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் என்பவரது வங்கிக் கணக்கு என  தெரியவந்தது. 
இந்நிலையில், இவ்வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அடையாளம் காண பல்வேறு ஆன்லைன் சைபர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, திரு. நாரா சைதன்யா, IPS, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மற்றும் திரு. பாஸ்கரன், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி, காவல் நிலைய அதிகாரி ஆய்வாளர் திரு. S. தியாகராஜன் மேற்பார்வையில், திரு. B.C. கீர்த்தி தலைமையின் கீழ் மற்றும் தலைமை காவலர் மணிமொழி மற்றும் காவலர் பாலாஜி, வைத்தியநாதன் ஆகியோர்களை கொண்ட சைபர் குழு  கேரளா சென்று மேற்கூறிய குற்றம் சாட்டப்பட்ட நபரை திருவனந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்து , புதுச்சேரி நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fraud of 5.10 crores through impersonation Kerala youth arrested


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->