தொடரும் சாலை விபத்து - 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் சித்ரா தம்பதியின் 60-ம் திருமணத்துக்காக குடும்பத்தினருடன் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஓலப்பாளையம் அருகே திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, கார் மீது மோதிய விபத்தில் மூன்று மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதே போன்று மதுரை திருமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ தம்பதிகள் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இதையடுத்து, இந்தக் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே விபத்துக்குள்ளானதில் மருத்துவ தம்பதி உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fourteen peoples died within 24 hours in tamilnadu


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->