தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி!  - Seithipunal
Seithipunal


தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு வேண்டியதை செய்து தருவோம் என புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கியுள்ளார். 

தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன.கூட்டணி போன்ற பல்வேறு  ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

இந்த நிலையில் புதுவையில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை பெற்று  மீண்டும் காங்கிரசின் கோட்டை என்பதைநிரூபிக்க வேண்டும்  என்பதில் தீவிரமாக உள்ளனர்.

அந்தவகையில் காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று தேர்தல் பிரசாரத்தையே தொடங்கியுள்ளனர். புதுவை நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்பை காப்போம் பிரசார பொது கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பொதுகூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அவர் மேலும் 

கூறுகையில் ரங்கசாமி ஆட்சியில் என்ன செய்துள்ளார்? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? தேர்தல் தினத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து முடிவெடுத்தால் உங்கள் வாழ்க்கை இருண்டு விடும். யாருக்கு ஓட்டு போட்டால் தொகுதி வளர்ச்சியடையும் என சிந்திக்க வேண்டும்.

தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு வேண்டியதை செய்து தருவோம்.இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Chief Minister V Narayanasamy kicks off election campaign


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->