கன்னியாகுமரி : வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்திய 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி : வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்திய 5 பேர் கைது.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அவர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி போலீஸார், மார்த்தாண்டம் ஈடர்ன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதை கண்டுபிடித்தனர். அங்கு, வெளிமாநிலத்தில் இருந்து இந்தத் தொழிலுக்காகவே இளம்பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில், பெரியவிளை பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவர் தான் அந்த பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் நடத்தியதும், இவர்கள் ஒரு திருமணத்திற்காக வந்திருப்பதாக பொய் சொல்லி இவர்களுக்கு வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுத்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் சுனில் மற்றும் இரு பெண்கள் உள்பட மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று ஆரல்வாய்மொழி பகுதியிலும் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக பொய் சொல்லி வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்யபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for renting house and sex bussiness in kanniyakumari


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->