மளமளவென எறிந்த தீ! சரக்கு ரெயிலில் தீ விபத்து! 8 மணி நேரமாக போராட்டம்!
Fire accident on a freight train trying for 8 hours
சென்னையில் மணலியிலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு ரெயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.அதுமாதிரியான 52 வேகன்களில் நேற்று டீசல் நிரப்பிய சரக்கு ரெயில் ஒன்று அதிகாலை மணலியிலிருந்து பெங்களூரு நோக்கி கிளம்பியது.இதில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் அதிகாலை 5.30 மணியளவில் வந்தபோது ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

அப்போது டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 18 டேங்கர்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வானுயரத்திற்கு புகை மூட்டம் சூழ்ந்தது.இதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து வெளியூர் சென்று வரும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.மேலும் தீ விபத்து தகவலை அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அங்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த வேகன்களுக்கும் பரவி, கிடுகிடுவென பற்றி எரிந்தது. அதில் யாரும் அதன் அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்தது. அங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில், தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக போராடி தீயை அணைத்தனர்.
அதாவது காலை 5.30 மணிக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ, மதியம் 2 மணி அளவில் அணைக்கப்பட்டது.இப்பகுதியில் மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. முதலில் ஒரு தண்டவாளத்தை சரி செய்து மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.இந்நிலையில், சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அனால், அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் மெதுவாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரெயில் பாதையிலேயே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.இதில் இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரெயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Fire accident on a freight train trying for 8 hours