அதிகாலையில் பரபரப்பு - விருதுநகரில் பட்டாசு ஆலையில் தீ விபத்து.!!
fire accident in firecrackers gudone in viruthunagar
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வெடிகளை பதுக்கி வைத்திருந்த பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்குள்ள பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் தீ ஏற்பட்டது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. பின்னர் இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fire accident in firecrackers gudone in viruthunagar