அடிதடியில் முடிந்த சண்டை...பிணமாக விழுந்த மனைவி...! - தூத்துக்குடியில் கணவரின் வெறிச்செயல்...!
fight ended fight wife fell dead Husband brutal act Thoothukudi
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சத்யாநகர் பகுதியில் குடும்பத் தகராறு கொலைச் சம்பவமாக மாறிய நிலையில், மனைவியை தாக்கி உயிரிழக்கச் செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் (48) கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
முதல் மனைவி உயிரிழந்த நிலையில், அவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். பின்னர் மணியம்மாள் (42) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கும் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.கணவன்–மனைவி இடையே நீண்டகாலமாக கருத்து முரண்பாடுகள் நிலவி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்ட நிலையில், மனவேதனை அடைந்த மணியம்மாள் சில நாட்களுக்கு முன்பு மதுரையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.இந்த நிலையில், கணேசன் மதுரைக்கு சென்று மனைவியை சமரசப் பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் வீடு திரும்பிய சில மணி நேரங்களிலேயே இருவருக்கும் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணேசன், மரக்கம்பு மற்றும் கைகளால் மணியம்மாளை கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மணியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு கணேசன் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், தகவலறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.
தொடர்ந்து மணியம்மாளின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தலைமறைவாக இருந்த கணேசனை விரைவாக கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி உயிரிழந்த இந்த சம்பவம் சத்யாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fight ended fight wife fell dead Husband brutal act Thoothukudi