குற்றாலம் : ஹோட்டலில் கெட்டுப்போன உணவு - சோதனையில் சிக்கிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


குற்றாலம் : ஹோட்டலில் கெட்டுப்போன உணவு - சோதனையில் சிக்கிய சம்பவம்.! 

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருக்கும். 

இந்த அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் இருக்கும். அந்த வகையில், குற்றாலத்தில் தற்போது சீசன் ஆரம்பமாகி உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். 

இதன் காரணமாக குற்றாலம் பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குற்றாலத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதன் படி இன்று குற்றாலம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் நிலா பிரியாணி உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் வெட்டி வைக்கப்பட்டிருந்த சிக்கன் மற்றும் பழைய மட்டன் உள்ளிட்டவைகளும், கெட்டுபோன 35 கிலோ சிக்கன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், 15 கிலோ நூடுல்ஸ் ரைஸ், சால்னா, முந்தைய நாளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான உணவுப்பொருள்கள் என்று மொத்தம் 50 கிலோ உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு அவை மொத்தமாக அழிக்கப்பட்டது. இதேபோல் பல உணவகங்களிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty kg wast food items destroyed in kutralam hotels


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->