வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே கைவரிசையா...? சவுகார்பேட்டை நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கம், 25 பவுன் கொள்ளை...! - Seithipunal
Seithipunal


சென்னை சவுகார்பேட்டையில் நகைக்கடை அதிபரின் வீட்டில் ரூ.5.25 லட்சம் ரொக்கம் மற்றும் 25 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற வீட்டு பணியாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை காவலர்கள் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சவுகார்பேட்டை முல்லா சாகிப் தெருவை சேர்ந்த சம்பத்ராஜ் (66) மற்றும் அவரது மகன் பிரமோத் மேத்தா ஆகியோர் இணைந்து என்.எஸ்.சி. போஸ் சாலையில் நகைக்கடை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில், சம்பத்ராஜ் தனது மனைவியை சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் சாவியை பீகார் மாநிலத்தை சேர்ந்த வீட்டு பணியாளர் மோனுவிடம் ஒப்படைத்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே, சம்பத்ராஜின் மகன் பிரமோத் மேத்தா, பணியாளர் மோனுவுக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு, “உங்கள் வீட்டில் பணியாற்றும் ராஜேஷ்குமார் தனது உறவினரை பார்க்க செல்ல வேண்டும் என கூறியதால், அவருக்காக ரேபிடோ இருசக்கர வாகன சேவையை பதிவு செய்து கொண்டிருக்கிறேன்” என மோனு பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடர்புகொள்ள முயன்றபோது, மோனுவின் அலைபேசி அணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இரவு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சம்பத்ராஜ் மற்றும் அவரது மனைவியிடம், குடியிருப்பு வளாக காவலாளர், “வீட்டு பணியாளர் மோனு சாவியை ஒப்படைத்து விட்டு சென்றார்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5.25 லட்சம் ரொக்கப் பணமும், 25 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் சம்பத்ராஜ் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சம்பத்ராஜின் வீட்டு பணியாளர் மோனு மற்றும் அவரது மகன் வீட்டில் பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து திட்டமிட்டு நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.வேலைக்கு சேர்ந்த ஒன்பது மாதங்களிலேயே கைவரிசை காட்டிய இருவரையும் காவலர்கள் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

few days after joining job gang 5 lakh cash and 25 pounds stolen from house jewellery shop owner Sougarpet


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->