கோயில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு.. ஒருவர் வெட்டி படுகொலை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் முருகனின் மகன் குமார். இவருக்கு திருமணமாக இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஜேசிபி, லாரி உள்ளிட்டவை வைத்து பிசினஸ் செய்து வருகிறார்.

இந்த நிலையில் வீரவநல்லூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி திருவிழா தொடங்கிய நிலையில்,  திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.

இதில் கோயிலில் குமார் தரப்பு சார்ந்த மண்டகப்படி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது பட்டாசு வெடிக்கும் போது அதே தரப்பை சேர்ந்த சிலருக்கும், குமார் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகே உள்ள குளத்திற்கு குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற 5 பேர் கொண்ட மர்மகும்பல் துரத்தி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வீரவநல்லூர் போலீசார் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் கொலைக்கு கோயில் திருவிழா தகராறு தான் காரணமா அல்லது வேறு ஏதும் முன்விரோத காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Festival fight one person murder in nellai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->