காதல் திருமணம் செய்து கொண்ட மூத்த மகள்.. மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை..! - Seithipunal
Seithipunal


மனைவியையும் மகள்களையும் கொலை செய்து விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (55). இவருக்கு புவனேஸ்வரி (வயது 45) என்ற மனைவியும் தனலட்சுமி (வயது 21), வினோதினி (வயது 18), அட்சயா (வயது 15) என மூன்று மகள்கள்  இருந்தனர்.லட்சுமணன் வீட்டிலேயே டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன் அவரது மூத்த மகள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவர் கடையை திற்க்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அனைவரும் சடலமாக கிடந்துள்ளனர். விசாரணையில் மனைவின் மற்றும் மகள்களை ஆட்டுகல்லை போட்டு கொலை செய்து விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்டு கொண்டுள்ளார்.

இதனை அடுத்து, அவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழ்ககுபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father who killed his 2 daughters and wife in Nagapattinam committed suicide


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal