கள்ளக்காதல்! மனைவி உயிருடன் இருக்கும்போதே இறந்ததாக தகவல்...! ஆத்திரமடைந்த கணவன்...!
Fake love Wife dies while still alive Angry husband
கன்னியாகுமரி சுசீந்திரத்தில் புத்தளம் பகுதியை சேர்ந்த 43 வயதான முன்னாள் 'ராணுவ வீரர்'.ஓய்வு பெற்ற பின்பு நாகர்கோவிலில் ஓட்டல் நடத்தி வந்த நிலையில்,அந்த ஓட்டலில் பூதப்பாண்டி நாவல்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் நெருக்கமாக பழகியதாக தெரிவிக்கப்பட்டதோடு, முன்னாள் ராணுவ வீரர் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.இதற்கிடையே, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டலை மூடிவிட்டு மனைவிக்கு சொந்தமான நிலத்தை ஈடு வைத்து பணம் பெற்றுள்ளார்.
இருப்பினும் எந்த தொழிலிலும் முறையாக ஈடுபடவில்லை.இதன் காரணமாக இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதற்கிடையே மனைவியின் செல்போன் பழுதானதால் அவர் தனது சிம்கார்டை கணவரின் செல்போனில் பொருத்தி பயன்படுத்தியுள்ளார்.
அந்த செல்போனில் முன்னாள் ராணுவ வீரர், ஓட்டலில் வேலை பார்த்த பெண்ணுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் இருந்தன. அவற்றை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி கணவரை கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி இறந்து விட்டதாக உறவினர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பதறியடித்து கொண்டு விரைந்து வந்தனர். அப்போது தவறான தகவல் என்பதை அறிந்து கணவரை கண்டித்தனர்.இதுகுறித்து மனைவி சுசீந்திரம் காவல் நிலையத்தில் கணவர் மீது புகாரளித்தார்.
அத்துடன் கணவரை பிரிந்து தாயார் வீட்டிற்கு சென்றார். அதன்பின்பு மனைவியின் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் ராணுவ வீரர் கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து மனைவி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
English Summary
Fake love Wife dies while still alive Angry husband