பெஞ்சல் புயல் - சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்!
express train service change in chennai for storm
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்தது. இதனால், வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கபடுகின்றன. அதன் விபரம் வருமாறு;
சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரெயில்கள் இன்று கடற்கரை ரெயில்நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. அதன் விபரம்;
* சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில்
* சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ்
* சென்ட்ரல் -திருவனந்தபுரம் ரயில்
* சென்ட்ரல் - பெங்களூரு மெயில்
* சென்ட்ரல் - கோவை அதிவிரைவு ரயில்
* சென்ட்ரல் - கோவை சேரன் எக்ஸ்பிரஸ்
இதேபோன்று, சென்ட்ரலில் இருந்து பெங்களூரு, மங்களூரு, திருப்பதி மற்றும் மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்படும். சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
express train service change in chennai for storm