தமிழக அரசியலில் பரபரப்பு: டெல்லி பயணமாகும் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்!
Excitement in Tamil Nadu politics BJP leader Nainar Nagendran to travel to Delhi
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர்.
கூட்டணியை விட்டு வெளியேறிய தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எனக்கு தகவல் இல்லை. அந்தச் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் இணைந்து செல்கிறார்கள்.
அங்கு நடைபெறும் சி.பி. ராதாகிருஷ்ணனின் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதே இவர்களின் பயண நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், டெல்லி செல்லும் இந்தப் பயணத்தின் போது, பா.ஜ.க. நிர்வாகிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் கூட்டணியைச் சுற்றியுள்ள அரசியல் சூழலில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Excitement in Tamil Nadu politics BJP leader Nainar Nagendran to travel to Delhi