எச்.எம்மின் வளர்ச்சியில் வயித்தெரிச்சல்.. அரசு பள்ளி ஆசிரியைகளின் அட்டூழியம்.. தங்க தாமரைகளின் தகரமான செயல்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரஎரியோடு பகுதியில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக தங்கவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகை என்றும் 2 ஆசிரியைகள் கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தலைமை ஆசிரியராக தங்கவேல் பொறுப்பேற்றுள்ளார். மாணவர்களின் நலனிற்காகவும், பள்ளியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் தங்கவேல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த அரசு பள்ளியில் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். 

மேலும், பள்ளியில் வெட்டியாக பணியாற்றி வந்த ஆசிரியர்கள், ஆசிரியைகளையும் கண்டித்துள்ளார். தலைமையாசிரியரின் கண்டிப்பு வெட்டியாக அரசு ஊதியத்தில் கொளுத்துப்போன ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து தங்கவேலுவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பொருட்டு, அரசு பள்ளியில் சேரும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.260, ஒன்பதாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ரூ.310 கல்விக்கட்டணம், பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.600 கட்டணமாக தலைமை ஆசிரியர் வசூல் செய்து வருவதாகவும், இதனை மாணவர்கள் பெற்றோர்கள் நலக்கூட்டமைப்பில் இருந்து கண்டிப்பதாகவும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.  

இந்த போஸ்டர்களை கண்ட மாணவர்கள் பெற்றோர்கள் நலக் கூட்டமைப்பு சங்கத்தினர், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், தங்களின் சங்கம் சார்பாக எந்த விதமான போஸ்டரும் ஒட்டப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்து எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், போஸ்டர் அடித்து ஒட்டியது ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகை என்பதை உறுதி செய்தனர்.இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eriodu Govt School Head Master Name Spoiled by Two Ego Teachers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->