#BREAKING :: நேற்று கரும்பு.. இன்று வேட்டி, சேலை..!! இறங்கி அடிக்கும் எடப்பாடி..!! பதறி தவிக்கும் தமிழக அரசு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு உடன் செங்கரும்பு வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் போராடி வந்தன. இந்த நிலையில் பொங்கல் பரிசு உடன் செங்கரும்பு வழங்காத தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என நேற்று காலை அறிவித்திருந்தார். 

இதனை அடுத்து நேற்று மதியம் பொங்கல் பரிசு உடன் செங்கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் ரத்து செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிலையில் தர மற்ற நூல்கள் வழங்கியதால் வரும் தைப்பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடுகளை கலைத்து குறித்த காலத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் "வரும் 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலை நெய்யும் பணி இந்த "கரப்ஷன் கலெக்சன் கமிஷன்" ஆட்சியின் அகோர பசியால் முடங்கிப் போய் இருப்பதாக நெசவாளர்களும், கூட்டுறவு சொசைட்டிகளை சார்ந்தவர்களும் புகார் தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன. கடந்த ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம் தான் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்தில் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும் துணி நெய்யும் போது தறியில் நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டுகளாக விழுவதால் துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர். இதனால் 90% நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திரும்பி அனுப்பி வருவதாகவும் தரமான நூல் வந்த தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. 

இதன் காரணமாக வரும் தைப்பொங்கலுக்கு ஏழை எளிய மக்கள் அனைவரும் உடுக்க உடை என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கனவு திட்டம் பாழாகும் நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காவிடில் வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை எளிய மக்களையும் ஒன்றிணைத்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS announce protest will be held if govt not given free vedi saree


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->