உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு.. போலீஸ்காரருக்கு காப்பு!
Enjoying pleasure and then refusing marriage Protection for the police officer
இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கடலூர் மாவட்டம், சேடப்பாளையம் நாகம்மாள்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சம்பத்,
28 வயதான இவர் இவர் கடந்த 2023-ம் ஆண்டு நெல்லையில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கின் போது மீட்பு பணிக்கு சென்றிருந்தார்.அப்போது நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய நெல்லையை சேர்ந்த 28 வயது பெண்ணுடன், சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பியதும், இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர்.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே கடந்த 28.12.2024 அன்று சம்பத், அந்த இளம்பெண்ணை கடலூர் அழைத்து வந்து விடுதியில் 4 நாட்கள் தங்க வைத்து ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அந்த இளம்பெண் சம்பத்தை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்ய கூறியபோது, அவர் மறுத்ததுடன் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்,அந்த இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
Enjoying pleasure and then refusing marriage Protection for the police officer