பொறியியல் மாணவர் சேர்க்கை விதிமுறையில் மாற்றம்.. உயர்கல்வித்துறை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த மே 6ம் தேதி முதல் ஜூன் 4ம் வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் பெறப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 446 பொறியியல் கல்லூரிகளில் 1.5 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக 2.24 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 2.11 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்த நிலையில் நடப்பாண்டில் 13 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு வரும் 26 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 2ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடைபாண்டில் பொறியியல் கலந்தாய்வுக்கான விதிகளில் சில மாற்றங்களை உயர்கல்வித்துறை கொண்டுவந்துள்ளது. அதன்படி நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் ரேண்டம் எண் வழங்கும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்கும் பொழுது அவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொண்டு ரேண்டம் எண் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாததால் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering student admission rules changed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->