வார இறுதி நெரிசலுக்கு முற்றுப்புள்ளி...! - 600-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!
end weekend congestion More than 600 special buses operation
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் ஒரே நேரத்தில் அமைந்துள்ளதால், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி திரும்பும் பயணிகளின் பெருகிய தேவையை சமாளிக்க, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விரிவான சிறப்பு பேருந்து இயக்கத் திட்டத்தை வடிவமைத்துள்ளது.

இதுகுறித்து மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்ட தகவலின்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கும்பகோணம், மதுரை,தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட முக்கிய திசைகளுக்கு ஏப்ரல் 17-ந் தேதி 295 பேருந்துகளும், ஏப்ரல் 18-ந் தேதி 310 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி, ஓசூர்,திருவண்ணாமலை, நாகை மற்றும் பெங்களூரு நோக்கி இரு நாட்களிலும் தலா 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதனுடன், ஈரோடு,பெங்களூரு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மாதாவரம் பகுதியிலிருந்தும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் தலா 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் வகையில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
end weekend congestion More than 600 special buses operation