ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் - போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வருகிற ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள கூடாது என்றும் பணிக்கு வரவேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததனால் ஜனவரி 9ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும். வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என்று அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும்" என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

employees come to work transport department order


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->