முடியவே முடியாது என்ற தேர்தல் ஆணையம்.. ஏன் முடியாது நீதிபதி காரசார விவாதம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 158 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. நடைபெற்று வரும் இந்த தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

ஊராட்சித் தேர்தலில் இரண்டாம் கட்டமாக 46 ஆயிரத்து 639 ஊரக ஊராட்சித் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் 38 ஆயிரத்து 916 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 ஊராட்சி தலைவர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் இன்றும் நடக்கும் தேர்தல மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குபதிவு  மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 27 மாவட்டங்களில் 25 ஆயிரத்து 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30(இன்று) பதிவான வாக்குகள் அனைத்தும் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய கோரி 10க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது எனவும் குறுகிய கால அவகாசமே உள்ளதால் தனித்தனியே வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள் இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் ஏன் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய இயலாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வீடியோ பதிவு செய்வது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மதியம் ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election vote counting video recording case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->