ஆசிரியர்களை அலார்ட் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஆசிரியர்களை அலார்ட் செய்த  அமைச்சர் அன்பில் மகேஷ்.! காரணம் என்ன?

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையில் ஏனோ தானோ என்று பணியாற்றும் அதிகாரிகள் அதை தங்கள் அகராதியில் இருந்து நீக்க வேண்டும்.

மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, சாதி ரீதியான தாக்குதலை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் மாணவர்களை கண்காணித்து களத்தில் நடப்பதை அறிந்து உடனடியாக அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவர்களுடைய பின்னணி குறித்து ஆராய்ந்து, அக்கறையுடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்து, தனியார் பள்ளிகளின் வாகனங்கள் மூலமாக நிகழும் விபத்துக்கள் உள்ளிட்டவைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்திருந்தால் அதை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாண்டு தேர்வுக்கான அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education minister anbil magesh speech in koturpuram anna memorable library


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->