தொழிலதிபர் ரத்தினம் தலைமறைவு? 2வது நாளாக ரவுண்டு கட்டும் ED! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஜிடிஎன் சாலையில் அமைந்திருக்கும் மணல் குவாரி உரிமையாளர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் மணல் குவாரி உரிமையாளர் ரத்தினம் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் ரத்தினம் தலைமறைவாக இருக்கலாம் என்பதால் அவர் நடத்தி வரும் நிறுவனங்கள், செங்கல் சூளை, பெட்ரோல் பங்குகளில் சோதனை விரிவுபடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொழிலதிபர் ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீடு, அலுவலகங்களில் நேற்றிரவு 11 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிந்தனின் திமுக கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று தமிழக முழுவதும் உள்ள மணல் குவாரிகளிலும் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீர்வளத் துறை அமைச்சர் துறைமுகம் நெருக்கமாக இருக்கும் கரிகாலன் வீட்டிலும் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரிகாலனுக்கும் மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம் மற்றும் ராமச்சந்திரனுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED raids continue 2nd day in Dindigul Rathinam related places


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->