சேலம் : ஏற்காட்டில் நில அதிர்வு - வீட்டை விட்டு ஓடிவந்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் இன்று மதியம் பன்னிரண்டு மணி அளவில் பலத்த சத்தத்துடன் வெடித் சத்தம் ஒன்று கேட்டது. இதன் விளைவாக சுமார் இரண்டு விநாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 

இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நில அதிர்வானது ஏற்காடு டவுன் மட்டுமில்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏற்காடு சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் தெரிவித்ததாவது, "நில அதிர்வு தொடர்பாக டெல்லியில் இருந்து தான் தகவல் வர வேண்டும். அங்கிருந்து தகவல் கிடைத்த பின்னர் நில அதிர்வு குறித்து தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earth quake in yercud peoples fear and outside home


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->