முதலிலேயே தெரியாதா.? எடப்பாடியால் எரிச்சல் அடைந்த துரைமுருகன்.!  - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், "ஸ்டாலின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களிடையே முழு கல்விக் கட்டணத்தையும் திமுகவை ஏற்கும் என்று அறிவித்து இருந்தார். 

நலிந்த மாணவர்களுக்கு அரசுதான் முன்வந்து உதவி வேண்டும். ஆனால் இதைப்பற்றி எல்லாம் எடப்பாடிக்கு கவலை இல்லை. ஸ்டாலின் சொன்ன பிறகு அரசு இதை செய்ய முயல்கிறது. முதலிலேயே இந்த எண்ணம் வர வேண்டாமா?

இதற்கு முழு முயற்சி எடுத்தவர் ஸ்டாலின்தான். உதயநிதி ஸ்டாலினை பிரச்சாரம் செய்ய விடாமல் கைது செய்து திமுக மீதான காழ்ப்புணர்ச்சியை அரசு காட்டுகிறது. கூட்டம் கூடுகிறது என்றால் முதல்வர் பங்கேற்கும் விழாக்களிலும், அமைச்சர்களின் நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் அதிகமாக கூடுகின்றனர். அங்கெல்லாம் கொரோனா பரவாதா? திமுக கூட்டத்தில் மட்டும்தான் கொரோனா பரவுமா.?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan press meet about eps


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal