விஜய்யின் நெல்லை மற்றும் தூத்துக்குடி பரப்புரை; 05 விபத்துகள்: 16 பேருக்கு சிகிச்சை..!
16 People Treated for Injuries in 5 Accidents During Vijays Campaign Tour in Nellai and Thoothukudi
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தவெக தலைவரும் நடிகமருமான விஜய் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று நண்பகல் 11.40 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் சென்றார். அங்கிருந்து அவர் புறப்படும் முன் இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து கே.டி சி நகரில் பிரசாரம் செய்த விஜய், அதன் பின்னர், சாலை மார்க்கமாக சென்றார்.
கிட்டத்தட்ட 35 கிமீ வரை சாலை வழியாக அவரது பயணத்திற்கு தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெறப்பட்டது. விஜய்யின் வருகையையொட்டி, பிரசார வாகனத்தின் மேல்புறம் நின்று கொண்டே சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்தாவறும். வணக்கம் வைத்தவாறும் அவர்களை உற்சாகப்படுத்தி சென்றார்.
அப்போது விஜய்யின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்தபடி ஏராளமான பைக்குகளில் ரசிகர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அப்போது ஒரு பைக்கில் சென்ற ரசிகர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளான. அவரின் பைக் மீது பின்னால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது.
இவ்வாறு பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 07 பேர் காயம் அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து நெல்லை நாராயணம்மாள்புரத்தில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலியில் அரசுப்பேருந்து மோதி காயமடைந்த இளைஞர் உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
16 People Treated for Injuries in 5 Accidents During Vijays Campaign Tour in Nellai and Thoothukudi