தமிழக முழுவதும் நிறுத்தப்பட்ட பொதுப்பணித்துறையின் புதிய டெண்டர் பணிகள்! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவ மழையின் காரணமாக புதிய டெண்டர் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க அறிவுறுத்தல்! 

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து பொதுப்பணித்துறை பணிகளும் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. தற்பொழுது தமிழக அரசு மாநில முழுவதும் நடைபெறும் பொதுப்பணித்துறையின் புதிய டெண்டர்ளுக்கான ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் இறுதிக்குள் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை துவங்க இருப்பதை அடுத்து புதிய சாலை, பாதாள சாக்கடை திட்டம் மற்றும் வடிகால் பணிகளுக்கு விடுபட்ட புதிய டெண்டர்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவ மழை காலங்களில் புதிய பணிகள் தொடங்கப்பட்டால் அதனால் ஏற்படும் பணி தொய்வு மற்றும் கட்டுமானத்தின் தரமும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய டெண்டர்களின் ஒப்புதலுக்கு தற்போது தடை விதித்துள்ளது. பருவமழை முடிந்த பின்னர் புதிய டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க அறிவுறத்தப்படுவார்கள். இந்த நடைமுறை புதிய டெண்டர்களுக்கு மட்டுமே தவிர ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to North East Monsoon rains instruction to suspend approval of new tender works


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->