எஸ்.ஐ சுட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, எஸ்.பி-க்கு அரிவால் வெட்டு.! பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி தங்களது பதவிகளை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களையும், 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர்களையும் தேர்வு செய்வதற்க்கான மறைமுக தேர்தலானது நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில், விருதுநகர் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தலின்போது அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  எஸ்.பி வெங்கடேனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று  விருதுநகரில் எஸ்.பி வெங்கடேனை அரிவாளால் வெட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dsp attack by political parties


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->