மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய போதை ஆசாமி - சிவகங்கையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக, கல்லூரி வாசலில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்தக் கல்லூரி வழியாக மது போதையில் பாக்யராஜ் என்ற நபர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதnக அவரது கண்ணில் அந்த பேனர் சிக்கியது. 

உடனே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய பாக்யராஜ் கீழே கிடந்த கல்லை தூக்கி எரிந்து பேனரை கிழித்தார். பின்னர், அதனை அகற்ற முயன்ற போது பின்புறமாக கீழே விழுந்தார். இதில், அவர் தலையில் அடிபட்ட நிலையில் சுயநினைவினை இழந்து மயங்கி கிடந்தார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பாக்யராஜ் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை திடீரென தாக்க முயநின்றுள்ளார். 

இதனை அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் படம் பிடிக்க முயன்றுள்ளார். இதையறிந்த பாக்யராஜ் அவரை ஆபாசமாக திட்டியதுடன் மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drunk man attack doctor in sivakangai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->