புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சேவை மையத்தில் குடி, கும்மாளம்; நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..!
Drinking and revelry at the Village Service Center in Puduchathiram Panchayat
பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுச்சத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுக்கு முன் ரூ.17 லட்சம் மதிப்பில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. இது முறையான பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வந்த நிலையில், தற்போது ரூ.25 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு கடந்த ஓராண்டிற்கு முன் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனாலும், இந்த கிராம சேவை மையம் இன்றுவரை முறையான பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. அத்துடன் இந்த கட்டிடத்தை சுற்றி புதர் மண்டி கிடப்பதுடன் குடிமகன்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சேவை மையத்தை முறையான பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Drinking and revelry at the Village Service Center in Puduchathiram Panchayat