சபாஷ்., இனி வாழ்நாளில் குடிக்கும் எண்ணமே வராது.! சிக்கிய 2 பேரை வச்சு செய்யும் உயர்நீதிமன்ற நீதிபதி.!  - Seithipunal
Seithipunal


திருச்சியை சேர்ந்த சிவா என்ற நபரும், கார்த்திக் என்ற நபரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் அந்த மனுவில், "கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்ட அவர்களுடன் சேர்ந்து மது அருந்தினோம்.

அப்போது எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் நாங்கள் அருந்திய மது பாட்டிலை கொண்டு சுரேஷ்யை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் மீது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகும். 

காவல்துறையினர் வழக்குகளில் கணக்கை காண்பிக்கும் நோக்கில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், நாங்கள் கடந்த 37 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறோம். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய எங்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆகவே எங்களுக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

அப்போது நீதிபதி புகழேந்தி அவர்கள், மது அருந்தி இதன் காரணமாகவே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் நாங்கள் மது அருந்த மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக கூறி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி அவர்கள், "மது அருந்தி நண்பனை தாக்கிய வழக்கில் இந்த ரெண்டு பேரும் இனி குற்றச் சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என்று, கிராம கிராம நிர்வாக அலுவலர், ஊர் முக்கிய பிரமுகர்கள் அல்லது ஊர் தலைவர்கள் யாராவது உறுதி அளித்தால், அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drinkers case issue in hc division


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->